எப்போது வேண்டுமானாலும் பிரிந்து செல்லக்கூடிய லிவிங் டுகெதர் உறவு முறை தற்போது அதிகரித்து வருகிறது. புதிய தலைமுறையினர் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு திருமணம் தடையாக உள்ளது. பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் கலாச்சாரம் திருமணங்களை பாதித்து வருகின்றது. இதில் ஒரு சிலரே லிவிங்க் டுகெதர் இல் இருந்துவிட்டு பின் திருமணம் செய்து கொள்கிறார்கள்.  லிங் விங் உறவில் இருப்பது இந்தியாவில் சாதாரண ஒன்றாக மாறிவிட்டது.

இந்நிலையில் டெல்லியில் ஷ்ரதா கொலை வழக்கை தொடர்ந்து லிவ் இங் உறவை சட்டப்படி அணுக வழி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி மமதா ராணி, லிவ் விங் உறவில் இருப்பவர்கள் பதிவு செய்ய இயலுமா என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். மக்கள் யாருக்கும் தெரியாமல் மறைவாக உறவில் இருப்பதால்தான் குற்றங்கள் நடைபெறுவதாக கூறியுள்ளார்.