தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் RTE சட்டத்திற்கு கீழ் 25 சதவீதம் இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை ஏப்ரல் 22 ஆம் தேதி நேற்று தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மே 20ம் தேதி வரை rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் பெற்றோர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் RTE சட்டத்தின் கீழ் ஆதரவற்ற குழந்தைகள், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள், துப்புரவு பணியாளர்களின் குழந்தைகள், மூன்றாம் பாலினத்தவர்களின் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இவர்களுக்கு அடுத்தே மற்றவர்களுக்கு வழங்கப்படும்.