திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, என் உயிரினும் மேலான, என் குடும்ப சொந்தங்களே, சாகர்மாலா திட்டத்தால் இன்று தமிழ்நாடு உட்பட தேசத்தின் பல்வேறு துறைமுகங்கள், நல்ல சாலைகளோடு, இணைக்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் பெரு முயற்சிகளால், இன்று பாரதத்தின் துறைமுகத் திறனிலும், கப்பல்கள் துறைமுகத்திற்கு வந்து, திரும்பிச் செல்லும் நேர அளவிலும், பெரிய மேம்பாடு ஏற்பட்டு இருக்கிறது. காமராஜர் துறைமுகம் கூட, இன்று தேசத்தின் மிக விரைவாக மேம்பாடு அடைந்து வரும் துறைமுகங்களில், ஒன்றாக விளங்குகிறது.

இந்த துறைமுகத்தின் கொள்திறனை நமது அரசாங்கம் கிட்டத்தட்ட, இரண்டு மடங்கு வரை அதிக படுத்தி இருக்கிறது. இப்போது பொதுவான சரக்கு பர்த்து இரண்டு மற்றும் கேப்பிட்டல் ரெஜின் ஐந்தாவது கட்டத்தின் தொடக்கம் காரணமாக தமிழ்நாட்டில் ஆக இருக்கும் ஏற்றுமதி, இறக்குமதிக்கு, புதிய சக்தி கிடைக்கும்.  சிறப்பான வகையில் இது வாகனத் துறையில் தமிழ்நாட்டின் திறன்கள்‌, திறமைகளை, விரிவாக்கும். அனுசக்தி உலை மற்றும் எரிவாயு குழாய் மூலமாகவும் கூட, தமிழ்நாட்டின் தொழிற்சாலைகளுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கல்களுக்கு, புதிய பலம் கிடைக்கும்.

எனதருமை குடும்ப சொந்தங்களே… இன்று மத்திய அரசு, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக, மாநிலத்தில் வரலாறு காணாத நிதியை, செலவு செய்து வருகிறது. 2014கிற்கு முன்பான பத்தாண்டுகளிலே, மத்திய அரசு அதன் தரப்பிலிருந்து மாநிலங்களுக்கு, சுமார் 30 லட்சம் கோடி ரூபாய் அளிக்கப்பட்டது. நம்முடைய அரசாங்கம் ஆனது, கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் மாநிலங்களுக்கு, 120 லட்சம் கோடி ரூபாயை அளித்திருக்கின்றது. 2014கிற்கு முன்பான பத்து ஆண்டுகளிலே, எத்தனை நிதியை மத்திய அரசிடம் இருந்து, தமிழ்நாடு பெற்றதோ, அதைவிட இரண்டரை மடங்கு அதிகமான நிதியை, நம்முடைய மத்திய அரசு அளித்திருக்கிறது என தெரிவித்தார்.