
செய்தியாளர்களிடம் பேசிய பாமக வடக்கு மண்டல இணைச்செயலாளர் ஏ கே மூர்த்தி, பெருமைக்குரிய மதுரை. சென்னைக்கு அடுத்தது மதுரை தலைநகரம். மதுரை ஸ்மார்ட் சிட்டி அறிவிக்கப்பட்டு கிட்டத்தட்ட 10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பல ஆண்டு காலம் ஆகிவிட்டது. நானும் காலையில் பல பகுதிக்கு சென்றேன். தமிழகத்தில் கிட்டத்தட்ட 15 மாநகராட்சி இருந்தாலும் கூட, மதுரை மாநகராட்சி சென்னைக்கு அடுத்து நம்பர் ஒன் மாநகராட்சியாக இருக்க வேண்டும்.
ஆண்டவர்கள், ஆண்டு கொண்டு இருக்கின்றவர்கள், ஆள துடிப்பவர்கள் எல்லாம் இந்த மாநகராட்சி பெருமைக்குரிய ஒரு சுற்றுலாத்தலமாக இருக்கின்ற…. தமிழ் வளர்த்த மதுரை மாநகராட்சி…. இந்த மாநகராட்சி தமிழகத்தில் முதல் மாநகராட்சியாக… சென்னைக்கு அடுத்து இருக்க வேண்டும் என்று, எங்களுடைய ஆசை… உங்களுடைய ஆசை…. அனைவரின் ஆசை… ஆனால் சாலையெல்லாம் பார்க்கின்றோம் சுத்தமாக இல்லை.
ஆங்காங்கே மழை நீர் கால்வாயை தோண்டி போட்டுவிட்டு, ஒரே மாசு. மழை நீர் கால்வாயில் தண்ணீர் தேங்கி கொண்டிருக்கின்றது. இதெல்லாம் போர்க்கால அடிப்படையில் மரியாதைக்குரிய நம்முடைய முதலமைச்சரவர்… அந்த துறை அமைச்சர்… உள்ளாட்சித் துறை அமைச்சராக இருக்கின்ற கே.என் நேருவிடம் சொல்லி, தேர்தலுக்கு முன்பு… மழை காலத்துக்கு முன்…. இந்த மதுரை மாநகராட்சி அழகு படுத்த வேண்டும் என்று தீர்மானம் போட்டு இருக்கின்றோம் என தெரிவித்தார்.