தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் வடிவேலு. இவரின் தம்பி ஜெகதீசன் இன்று காலை காலமானார்.. 55 வயதாகும் இவர் மதுரையில் ஜவுளி வியாபாரம் செய்து வந்த நிலையில் கல்லீரல் செயல் இழப்பு காரணமாக கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை மதுரை சார வாதநல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். வடிவேலு போல முகத்தோற்றத்தை கொண்ட இவர் காதல் அழிவதில்லை படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவரின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.