தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் விஜய் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தில் பல வருடங்களுக்குப் பிறகு விஜய் உடன் திரிசா ஜோடி சேர்ந்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமேல் லியோ திரைப்படத்தில் நடித்து வரும் இடையில் தற்போது இந்த படத்தில் மேலும் ஒரு நடிகை நடித்துள்ளது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது திருமலை படத்தில் வாடியம்மா ஜக்கம்மா பாடலுக்கு விஜய் உடன் சேர்ந்து நடனமாடிய நடிகை கிரண் தான் லியோ திரைப்படத்தில் தானும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீது மேலும் எதிர்பார்ப்பு இருந்துள்ளது.