
ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு அவ்வப்போது பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போது தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் மின் தராசுகளுடன் மின்னணு பாயின்ட் ஆப் சேல்(இபிஓஎஸ்) சாதனங்களை இணைக்க அரசு முயற்சித்து வருகிறது. இதன் காரணமாக ரேஷன் பெறுபவர்கள் தங்களின் ரேஷன் பொருட்களை முழுமையாக வாங்க முடியும். அதோடு இதற்காக உணவு பாதுகாப்பு சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.
ரேஷன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டாலோ (அ) ரேஷன் விநியோகம் செய்யும் டீலரால் ஏதேனும் இடையூறு ஏற்பட்டாலோ வாடிக்கையாளர் நேரடியாக புகாரளிக்கலாம். இதற்கு ரேஷன் அட்டை வைத்திருப்பது அவசியம் ஆகும். உங்கள் புகார் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். அந்த வகையில் டெல்லி ரேஷன் கார்டு வைத்திருப்போராக இருப்பின், மின்னஞ்சல் வாயிலாக உங்கள் புகாரை தெரிவிக்கலாம். இதற்கு [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவேண்டும். மேலும் அதிகாரப்பூர்வ வலைத்தளமான http://fs.delhigovt.nic.inல் ஆன்லைன் புகாரை பதிவுசெய்யலாம்.