புதுச்சேரியில் கட்டமாறன் ப்ரூயிங் கோ-பாண்டி எனும் நிறுவனமானது செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு “பீர் பஸ்” எனும் புது சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. வருகிற 22ம் தேதியன்று இந்த சேவை துவங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு ஒருநாள் பயணமாக நபர் ஒருவருக்கு ரூ.3,000 வசூலிக்கப்படும். இந்த பஸ்ஸில் வித விதமான உணவுகளை சாப்பிட்டபடி புதுச்சேரியின் அழகை கண்டு ரசிக்கலாம்.

அதேநேரம் பீர் பஸ் என்பதால் பேருந்தில் மது அருந்தலாம் என யாரும் நினைக்க வேண்டாம். இதுபற்றி அந்நிறுவனத்தின் அமைப்பாளர்கள் கூறியதாவது “பீர் பஸ் என அழைப்பதால் பேருந்தில் மது அருந்தலாம் என யாரும் நினைக்கவேண்டாம். ஆகவே பேருந்தில் பீர் குடிக்க அனுமதிக்கமாட்டோம். எனினும் அரசு அனுமதித்த இடத்தில் பேருந்து நிறுத்தப்படும்.

அங்கு பீர் அனுமதிக்கப்படும் என்று கூறுகின்றனர். சென்னையிலிருந்து ஒரே நாளில் 35 -40 சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும் சென்னைக்கு பேருந்து வரும். தற்போது இதற்குரிய முன்பதிவு தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தனர். சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு பீர் பஸ் அறிவிப்பு பற்றிய செய்திகளை பலரும் சமூகவலைதளங்களில் பகிர்ந்தும், தங்கள் கருத்துக்களை பதிவிட்டும் வருகின்றனர்.