இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை தொடர்ந்து உயர்த்தி கொண்டே வந்தது. இதனால் பல வங்கிகளும் வட்டி விகிதங்களை தொடர்ந்து உயர்த்தின.என் நிலையில் நடப்பு ஆண்டுக்கான ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டம் அண்மையில் நடைபெற்ற நிலையில் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த ஒரு மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் கடன் பெற்றவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் தனியார் வங்கியான எச்டிஎப்சி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி கடன்களுக்கான MCLR வட்டி விகிதத்தை 0.85 சதவீதம் குறைக்கப்பட்டு தற்போது 7.80 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும் மூன்று மாதங்களுக்கான எம் சி எல் ஆர் வட்டி விகிதம் ஜியோ புள்ளி 40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே ஆறு மாதங்களுக்கான விகிதம் 0.10 சதவீதம் குறைக்கப்பட்டு 8.7 சதவீதமாக உள்ளது.தற்போது வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால் வங்கியில் கடன் வாங்கியவர்களுக்கான மாத இஎம்ஐ குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.