எப்படியாவது அரசு வேலையில் சேர்ந்து விட வேண்டும் என்று பல லட்சம் மாணவர்கள் அரசு வேலைக்காக தீவிரமாக படித்து வருகிறார்கள். இதில் கடந்த 2014 ஆம் வருடம் தேர்தல் வாக்குறுதியின் படி பிரதமர் மோடி ஒரு கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார். ஆட்சி அமைந்து பல வருடங்கள் ஆகிய இன்னும் வேலை வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்று எதிர் கட்சிகள் விமர்சித்து வந்தது. இதனை தொடர்ந்து சமீபத்தில் ரோஸ்கார் மேளா என்ற வேலைவாய்ப்பு கண்காட்சி மூலமாக 75 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு துறைகளில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் ‘ரோஸ்கர் மேளா’ எனும் நடவடிக்கையின் கீழ் புதிதாக பணியில் சேர்க்கப்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் 71,000 பேருக்கு, ஏப்.13 அன்று பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்க உள்ளார். 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான அரசு நடவடிக்கையே ரோஸ்கர் மேளா செயல்பாடு ஆகும். இந்த நடவடிக்கை ஆனது வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.