NordPass நிறுவனத்தின் ஆய்வின் படி 2023 ஆம் ஆண்டில், “123456” என்பது இந்தியர்களிடையே மிகவும் பொதுவான கடவுச்சொல்லாக உள்ளது, இது தனிப்பட்ட தரவுகளை ஹேக்கர்கள் எளிதில் ஹேக் செய்யும் வகையில் இருக்கக்கூடிய மோசமான கடவுச்சொல். உலகளவில் உலகின் மிகவும் பிரபலமான கடவுச்சொற்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு (31%) முற்றிலும் எண்ணியல் வரிசைகளைக் கொண்டுள்ளது என்பதை ஆய்வு எடுத்துக்காட்டுகிறது.

ஆச்சரியப்படும் விதமாக, பயனர்கள் எளிதாக யூகிக்கக்கூடிய கடவுச்சொற்களை அடிக்கடி தேர்வு செய்கிறார்கள்,உதாரணம்  “இந்தியா@123” போன்ற நாடு அல்லது நகரப் பெயர்கள் இந்த  பட்டியலில் அதிகமாக இடம்பெற்றுள்ளன. அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடிகள் மற்றும் ஆன்லைன் வாயிலாக சந்திக்கக்கூடிய தேவையற்ற பிரச்சனைகள் என தனிநபர்களிடமிருந்து திருடப்படும் தகவல்கள் வாயிலாக தொடர்ந்து பல குற்றங்கள் நடைபெற்று வருகின்றனர். இவற்றை தடுப்பதற்கு மக்கள் விழிப்புணர்வோடு இருப்பதோடு எளிதில் யூகிக்க முடியாத அளவிற்கு கடினமான கடவுச் சொற்களை பயன்படுத்த வலியுறுத்தப்படுகின்றனர்.