நம்மில் பலருக்கும் காலில் பித்த வெடிப்பு ஏற்படும் பிரச்சனை உள்ளது. எனவே பித்த வெடிப்பு ஏற்பட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறும் குறிப்புகளை தெரிந்து கொள்ளுங்கள். குதிங்காலில் அழுக்கு சேருகின்றதா என்று பலரும் கவனிக்க தவறிவிடுவார்கள். அதிக நேரம் காலணிகள் மற்றும் ஷூக்களை அணிந்து கொண்டு பல இடங்களுக்கு நாம் செல்லுவதால் பாதங்களுக்கு அடியில் கிருமிகள் உண்டாகும்.
இதனால் தினமும் குளிக்கும் போது பாதத்தில் நன்கு சோப்பு தேய்த்து குளிக்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால் பித்த வெடிப்பு ஏற்படும். வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். கீரை, பயிறு மற்றும் பல வகைகளை சாப்பிட வேண்டும். இதையெல்லாம் தொடர்ந்து செய்தால் காலில் உள்ள பித்த வெடிப்பு படிப்படியாக மறைந்து விடும். மேலும் காலில் பித்த வெடிப்பு தொடர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.