மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று தண்ணீர். மனிதர்கள் உணவு இன்றி 8 முதல் 21 நாட்கள் வரை வாழ முடியும். ஆனால் தண்ணீர் இல்லாமல் மூன்று நாட்களுக்கு மேல் வாழ முடியாது. இதுக்கு உயிர் கொடுக்கவும் உயிர் எடுக்கவும் ஆற்றல் உண்டு. இதனால்தான் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தண்ணீரை சேமிக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். மேலும் மழைநீர் சேமிப்பு திட்டங்கள் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் இதை எல்லாம் மிஞ்சும் அளவிற்கு மேலாக சிங்க் தண்ணியை மறுசுழற்சி செய்யும் உணவகம் பெல்ஜியத்தில் உள்ளது. சுற்றுச்சூல் நலனுக்காக உலகெங்கிலும் உள்ள பல சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தண்ணீரை மறுசுழற்சி செய்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றார்கள். ஆனால் இந்த வேலையை பெல்ஜியத்தை சேர்ந்த உணவகம் சிறப்பாக செய்து வருகின்றது.

அந்த நிறுவனம் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஐந்து கட்ட நிலைகளில் கழிப்பறை தண்ணீர் சுத்திகரிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அதே தண்ணீரில் காபி போடப்பட்டு விருந்தினர்களுக்கு வழங்கப்படுகிறது. இது குறித்து ஹோட்டல் நிர்வாகி பேசுகையில் இந்த தண்ணீர் மிகவும் ஆரோக்கியமானது என்றும் முதலில் கழிவறை நீர் தாவர உரத்தை பயன்படுத்தி ரசாயன சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.

இதனை தொடர்ந்து முன்பே சேகரிக்கப்பட்ட மழை நீரை தண்ணீரில் கலந்து மீதமுள்ளவை முற்றிலும் சுத்திகரிக்கப்படுகின்றது எனக் கூறியுள்ளார். மேலும் கூடுதல் பாதுகாப்புக்கு கனிமங்கள் சேர்க்கப்படுகின்றது எனவும் எனவே சாதாரண தண்ணீரை விட இதில் சத்துக்கள் அதிகம் இருக்கும் என்றும் மக்கள் விரும்பி கொடுக்கிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.