நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 8) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 21 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 45 காசுகளிலிருந்து, பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 15 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 60 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.