கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் தமன்னா. இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Fans Call Me Thamana என்ற பெயரில் கணக்கு தொடங்கி ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இவர் சிகரெட் பிடித்தபடியும் கையில் கையில் ஆயுதங்களை வைத்துக் கொண்டும் ரவுடிசம் பாடல்களுக்கு டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டு வருகிறார்.

இந்த வீடியோவுக்கு புள்ளிங்கோ பலரும் ஆதரவு கொடுப்பதால் தொடர்ந்து அது மாதிரியான வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளார். இது தற்போது கோவை காவல்துறையினரின் கவனத்திற்கு சென்றுள்ளதால், இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தமன்னாவை தேடி வருகிறார்கள். மேலும் காவல்துறையினர் தன்னை தேடுவது தெரிந்ததால் தமன்னா தற்போது தலைமறைவாகிவிட்டார். இவரை தற்போது காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாக வலை வீசி தேடி வருகிறார்கள்.