தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டத்திற்காக பயனாளர்களை தேர்வு செய்வதற்கான விதித்துறை மற்றும் வருவாய் துறையின் தகவல் சேகரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி PHH என்ற வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள முன்னுரிமை உள்ள குடும்ப அட்டைதாரர்கள், PHH -AAY என்ற அந்தியோதயா அன்னை யோஜனா திட்ட அட்டை, அதாவது 35 கிலோ அரிசி அட்டைதாரர்களுக்கு வழங்க வாய்ப்பு உள்ளது. குடும்பத் தலைவிக்கு தான் உரிமை தொகை என்பதால் குடும்ப அட்டையில் பெயர் மாற்றம் செய்ய வேண்டியது இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கும் திட்டம் கருணாநிதியின் கருணாநிதி தொடங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் பெண்களுக்கான மாத உரிமை தொகை விரைவில் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண்களின் முன்னேற்றத்திற்காக திமுக தேர்தல் வாக்குறுதியின் வழங்கப்படும் என சொல்லப்பட்ட ஆயிரம் ரூபாய் மாத உரிமைத் தொகை பற்றிய அறிவிப்பினை வருகின்ற நிதிநிலை அறிக்கையில் வெளியிட இருக்கிறோம் எனவும் முதல்வர்  ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.