டெல்லியிலிருந்து காணொலி காட்சி வழியாக அஜ்மீர்-டெல்லி கன்டோன்மென்ட் வரை செல்லக்கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து துவங்கி வைத்துள்ளார். இதையடுத்து அவர் பேசியதாவது, சுதந்திரத்திற்கு பிறகு ரயில்வே துறை நவீனமடைவதில் அரசியல் விருப்பங்கள் எப்போதும் ஆதிக்கம் செலுத்தி வந்தது.

துரதிர்ஷ்ட விதமாக சுயநலம் மற்றும் கீழ்த்தரம் வாய்ந்த அரசியல் போன்றவற்றால் ரயில்வே துறை நவீனமடைந்து விடாதபடிக்கு எப்போதும் இருட்டடிப்பு செய்யப்பட்டு வந்தது என பிரதமர் கூறியுள்ளார். பெரிய அளவிலான ஊழல் ரயில்வேயில் வளர்ச்சி ஏற்பட விடாமல் செய்ததோடு ரயில்வேயில் பணியாளர் தேர்வு நடைமுறையிலும் வெளிப்படை தன்மை இல்லாமல் செய்துவிட்டது. அதி விரைவு முதல் அழகான வடிவமைப்பு வரை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. இதன் காரணமாக ராஜஸ்தானில் சுற்றுலாத்துறை வளர்ச்சியடையும் என தெரிவித்துள்ளார்.