உருமாறிய கொரோனா வைரஸால் நோய் எதிர்ப்பு மண்டலத்தை தாக்க முடியும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த மாறுபாட்டால் வைரஸினுடைய முந்தைய வேரியண்டை காட்டிலும் மிகவும் தொற்றும் தன்மை உடையது மற்றும் அதிக வீரியமிக்கதாக இருப்பதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதன் காரணமாக  இன்ஃப்ளூயன்சா, அடினோவைரஸ் போன்ற தொற்றுக்கள் அதிகமாக இருக்கும். எனவே அடுத்த நான்கு வாரங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளார். இந்த இன்ஃப்ளூயன்சா வைரஸ் குழந்தைகளை அதிக அளவில் தாக்குவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.