பொதுவாக வங்கியில் கடன் வாங்க விரும்புபவர்கள் சிபில் ஸ்கோரை நன்றாக வைத்திருக்க வேண்டும். இந்த சிபில் ஸ்கோரை பொறுத்துதான் வங்கிகள் உங்களுக்கு கடன் கொடுக்க முன்வரும். வாடிக்கையாளர்களின் சிபில் ஸ்கோர் 300 முதல் 900 வரை இருக்க வேண்டும். குறிப்பாக 750-க்கு மேல் சிபில் ஸ்கோர் இருந்தால் கண்டிப்பாக வங்கிகளில் உங்களுக்கு கடன் கிடைக்கும். சிபில் ஸ்கோர் என்பது ஒரு நபர் எத்தனை முறை கடன் வாங்கியுள்ளார் அதை நேரத்தில் திருப்பி செலுத்தியுள்ளாரா என்பதை பார்ப்பது ஆகும். இந்நிலையில் உங்களுடைய சிபில் ஸ்கோரை எப்படி தெரிந்து கொள்ள முடியும் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

அதன்படி சிபில் ஸ்கோரை தெரிந்து கொள்வதற்கு முதலில் https://www.cibil.com/ என்ற முகவரிக்குள் செல்ல வேண்டும். அதன் பிறகு get free CIBIL score and report என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு உங்களுடைய அக்கவுண்டை கிரியேட் செய்து, மெயில் ஐடி, பாஸ்வேர்ட், பெயர், அடையாள அட்டை, பிறந்த தேதி மற்றும் செல்போன் நம்பர் போன்றவற்றை பதிவிட்டு accept and continue என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு நீங்கள் பதிவு செய்த நம்பருக்கு வரும் ஓடிபி நம்பரை பதிவிட்டு கண்டின்யூ என்ற ஆப்ஷனை செலக்ட் செய்ய வேண்டும். பிறகு go to dashboard என்ற ஆப்ஷனை தேர்வு செய்தால் myscore.cibil.com என்ற பக்கத்திற்கு செல்லும். மேலும் அதில் உங்களுடைய மெயில் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் போன்றவற்றை உள்ளீடு செய்தால் சிபில் ஸ்கோர் திரையில் காட்டும்.