பெங்களூருவில் பைக் டாக்ஸி ஓட்டுனர் பெண் பயனிடம் தகாத செயலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பெங்களூருவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் Rapido பைக் சவாரி மேற்கொண்ட போது சம்பந்தப்பட்ட ஓட்டுநர் தன்னிடம் தகாத நடத்தையில் நடந்து கொண்டார் என தனது ட்விட்டர் பக்கம் மூலம் புகார் தெரிவித்துள்ளார். அதில், பெங்களூர் டவுன்ஹாலில் நடைபெற்ற மணிப்பூர் கலவரம் தொடர்பான போராட்டத்திற்கு சென்று பின் வீடு திரும்புவதற்காக Rapido  செயலியில் ஆட்டோ புக் செய்ய முயன்றேன். நீண்ட நேரம் முயற்சி செய்தும் எந்த ஆட்டோவும் கிடைக்கவில்லை.

அதற்கு மாறாக பைக் டாக்ஸி தயாராக இருப்பதாக வழிகாட்டப்பட்டது. பின் அதை தேர்வு செய்தேன். ஓட்டுனராக வந்தவர் Rapido செயலியில் பதிவு செய்து இருந்த வாகனத்தை கொண்டு வராமல் வேறு வாகனத்தை சவாரிக்கு எடுத்து வந்திருந்தார். காரணம் கேட்டறிந்த போது தனது வாகனம் சர்வீஸில் இருப்பதாகவும், அதற்கு மாற்றாக இதை எடுத்து வந்துள்ளேன் எனவும் விளக்கம் அளித்தார். நேர காரணம் கருதி நானும் சவாரிக்கு ஒப்புக்கொண்டு அவரது செயலியில் ஓடிபி கூறி பயணத்தை மேற்கொண்டேன்.

சிறிது தூரம் சென்றதும் வாகனம் ஏதும்  இல்லாத சமயத்தில் ஓட்டுநர் திடீரென ஒரு கையில் வாகனத்தை இயக்கத் தொடங்கினார். தகாத செயல்களில் நடந்து கொண்டார்(சுய இன்பம் செய்தார்). அது எனக்கு அதிர்ச்சியை அளித்தது. நான் என் பாதுகாப்பு கருதி அச்சமயத்தில் மௌனம் காத்தேன். பின் என் வீட்டின் முகவரி தெரியாமலிருக்க நான் இறங்க வேண்டிய இடத்திற்கு 200 மீட்டர்  முன்பாக இறங்கிவிடும் படி வலியுறுத்தினேன்.

சவாரி முடிந்த பின்பும் அந்த நபர் தொடர்ச்சியாக தன்னை வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு தகாத நடத்தைகளில் ஈடுபட்டு வந்தார். அதன் பின் அவரை பிளாக் செய்தேன்.  இருப்பினும், வெவ்வேறு எண்களிலிருந்து, தொடர்ச்சியாக தன்னை தொடர்பு கொள்ள அவர் முயற்சித்து கொண்டே இருக்கிறார். Rapido நிறுவனம் தங்களுடைய பயணிகளின் பாதுகாப்பு குறித்து அக்கறை செலுத்துகிறீர்களா ? இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் ? என கேள்வி எழுப்பியுள்ளார். அவரது பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக சம்பந்தப்பட்ட நபர் தற்போது பெங்களூர் காவல்துறையினர்  கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.