செய்தியாளர்களிடம் பேசிய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ, இந்து, முஸ்லிம் இல்ல வேறு வேறு மதத்தை சார்ந்தவர்கள் எல்லோரும் அவரவர்கள் வீட்டில் விளக்கை ஏற்றிவிட்டு  ராமரை  வரவேற்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தியா முழுவதும் மட்டுமல்ல உலகத்திலேயே ஒவ்வொரு இடத்திலும் இந்தியர்கள்  எங்கு வாழ்கிறார்களோ அவர்கள் இதை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இதை  மிகப்பெரிய விஷயமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

நேற்று என்னுடைய அத்தை பிரதமர் அவர்களை சந்தித்து…. 92 வயது அவர்களுக்கு…. பிரதமரை சந்திக்க வேண்டும் என்று சொல்லி,  எங்கள் அத்தை  பிரதமரை பார்த்து விட்டு, 10  நிமிடம் அவர்கள் கையை பிடித்து அவரிடம் பேசி ஆசீர்வாதம் கொடுத்துட்டு வந்திருக்கிறார்கள். ராமர் கோவில் கட்டியிருக்கிறார். அதற்காக  நிச்சயமாக வாழ்த்து சொல்ல வேண்டும் என்று சொல்லிட்டு…..

92 வயதிலும் எங்க அத்தை பிரதமர் அவர்களை பார்க்க வேண்டும் என்றால்,  மற்றவர்களை நினைத்து பாருங்கள், எப்படி ? உண்மையான   தாய்மார்கள் மட்டுமல்ல,  பெரியவர்களுடைய ஆசிர்வாதத்தோடு தான் இன்னைக்கு பிரதமர் மோடி அவர்கள் இருக்கிறார்கள்.  ராமர் கோவில் பொருத்தவரை என்னை பொறுத்தவரை இது நம் நாட்டினுடைய ஒற்றுமை,  நம் நாட்டினுடைய  செக்குலரிஸம் என  காட்டுவதற்கான விஷயமாக நான் பார்க்கிறேன் என தெரிவித்தார்.