கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோட்டார் வாகையடி பகுதியில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரயில்வே துறையில் தண்டவாள பராமரிப்பு ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று ஒழுகினச்சேரி ரயில்வே பாலம் அருகே இருக்கும் தண்டவாளத்தில் மணி பராமரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது நாகர்கோவிலில் இருந்து கொச்சுவேலி நோக்கி சென்ற ரயிலில் அடிபட்டு மணி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.