கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிட்டம்பட்டி பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமூர்த்தி(31) என்ற மகன் உள்ளார். கடந்த ஒரு வருடமாக திருமூர்த்தி கோவிந்தா அக்ரஹாரம் கிராமத்தில் மருத்துவமனை வைத்து பொதுமக்களுக்கு ஆங்கில முறையில் சிகிச்சை அளித்து வந்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த ஓசூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் ஞான மீனாட்சி தலைமையில் மாவட்ட மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் ராஜீவ் காந்தி, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். இதனையடுத்து மருத்துவ குழுவினர் நடத்திய விசாரணையில் திருமூர்த்தி போலியான டாக்டர் என்பது தெரியவந்தது. இதனால் போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் மருத்துவ குழுவினர் திருமூர்த்தியின் மருத்துவமனை மற்றும் மருந்து கடைக்கு சீல் வைத்தனர்.