பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கத்தில், ராபிடோ நிறுவனம் புதிய ரேபிடோ பிங்க் பைக் டாக்ஸி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவையை முதலில் கர்நாடகாவில் அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க பெண்கள் இயக்கும் இந்த பைக் டாக்ஸி சேவை பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான சுற்றுப்பயண அனுபவத்தை கொடுக்கும். உலக முதலீட்டு மாநாட்டின் போது அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் பெண்களை வேலைவாய்ப்பில் முன்னேற்றும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதாகும். இதன் முக்கிய நோக்கமே 25000 பெண்களை தொழில் முனைவர்களாக உருவாக்குவது தான்.

அவர்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்தை வழங்குவதுடன், அவர்கள் தானாகவே டிரைவர்களாக உருவாக்க ஊக்குவிக்கவும் இந்த திட்டம் உதவுகிறது. பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதில் பின்னணி சரிபார்ப்பு, நேரடி கண்காணிப்பு போன்ற அம்சங்கள் உள்ளன. கர்நாடகா முழுவதும் செயல்படுத்த உள்ள இந்த திட்டம் 2030க்குள் ஒரு டிரில்லியன் பொருளாதார வளர்ச்சி இலக்கை அடையும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ராபிடோ நிறுவனம் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.

இதில் பணியாற்றும் ஊழியர்களில் 35 சதவீதம் பேர் சிறிய நகரங்களில் இருந்து வந்தவர்களாக உள்ளனர். இந்த திட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், பாதுகாப்பான நகர போக்குவரத்திற்கும் ரேபிடோ உறுதியாக பணியாற்றி வருகிறது. இதற்காக கர்நாடகா மாநில அரசு ரூபாய் ஒரு லட்சம் கோடி செலவில் உள்கட்டமைப்பு மேம்பாடு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் பெண் பயணிகள் மேலும் பாதுகாப்பாக நகரத்தில் பயணிக்கலாம். பெண்களின் தொழில் முன்னேற்றத்திற்கு இது வழி வகுக்கும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.