ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடை பயணத்தின்போது பஞ்சாப்பில் இன்று(ஜன,.14) ஜலந்தர் தொகுதி காங்கிரஸ் எம்பி. சந்தோக்சிங் சவுத்திரி மரணமடைந்தார். நடைபயணத்தின் போது மயங்கி விழுந்த அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் அவர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் அவரது மறைவை அடுத்து ராகுல் காந்தியின் பாதயாத்திரை அடுத்த 24 மணி நேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. நாளை பிற்பகல் ஜலந்தர் அருகில் இருந்து நடைபயணம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.