லட்சத்தீவு எம்பியாக இருந்து வருபவர் முகமது பைசல். சென்ற 2009ம் வருடம் மக்களவை தேர்தலின் போது முகமது பைசலும், வேறு சிலரும் ஒரு அரசியல் விவகாரம் குறித்து முன்னாள் மத்திய மந்திரி பி.எம்.சயீத்தின் மருமகன் பாடாநாத் சாலிக்கை தாக்கியதாக கூறப்படுகிறது. அதன்பின் முகமது பைசல் மீது காவல்துறையினர் வழக்குப்பதிந்தனர்.

இவ்வழக்கில் முகமது பைசல் உட்பட 4 பேருக்கு 10 வருடம் சிறைத்தண்டனை மற்றும் தலா ரூபாய்.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுபற்றி கருத்து தெரிவித்த எம்.பி. முகமது பைசல், இந்த வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது. இத்தீர்ப்பை எதிர்த்து மேல் கோர்ட்டில் விரைவில் முறையீடு செய்யப்படும் என தெரிவித்தார். இந்நிலையில் கொலைமுயற்சி வழக்கில் 10 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் முகமது பைசல், எம்.பி. பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.