உத்தரகாண்ட்டின் நைனிடால் நகருக்கு மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சர் அஜய்பட் சென்றார். ஜோஷிமத் போன்ற பேரழிவு நைனிடாலில் ஏற்படுவதற்குரிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக அவர் கூறினார். மேலும் நகரின் சில பகுதிகளில் நிலத்தில் விரிசல் ஏற்படுவது பற்றியும் தீவிர கவனம் செலுத்தி வருவதாக கூறினார். மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் நைனிடாலில் நிலச் சரிவுகள் குறித்து மாவட்டத்தின் அனைத்துதுறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்தை நடத்தினார்.
இந்நிலையில் நைனிடால் லோயர் மால் சாலையில் கடந்த பல ஆண்டுகளாக விரிசல்கள் ஏற்பட்டுள்ளதை முக்கிய பிரச்னையாக எடுத்துரைத்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். அத்துடன் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நிரந்தரமாக சரிசெய்வது குறித்த செயல் திட்டத்தை தயாரிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.