தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஜோதிகா. இவர் நடித்து தமிழில் ரிலீஸ் ஆன “ராட்சசி” திரைப்படம் “மேடம் கீதாராணி” எனும் பெயரில் ஹிந்தியில் டப்பிங் ஆகி 321 மில்லியன் பார்வைகளைப் பெற்று, அதாவது 32 கோடி முதலிடத்தில் இருக்கிறது.

அதற்கு அடுத்த இடத்தில் தளபதி விஜய் நடித்த ஜில்லா படம் “போலீஸ்வாலா குண்டா 2” எனும் பெயரில் வெளியாகி 257 மில்லியன் பார்வைகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. கடந்த 2019 ஆம் வருடம் வெளியாகிய ராட்சசி படத்தை கவுதம்ராஜ் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜோதிகா, பூர்ணிமா பாக்யராஜ், சத்யன் உட்பட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.