தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் ஹரி. கமர்சியல் படங்களை எடுப்பதில் பெயர் போன ஹரி நடிகர் சூர்யாவை வைத்து வேல், ஆறு, சிங்கம் போன்ற வெற்றி படங்களை இயக்கியுள்ளார். அதன் பிறகு ஹரி இயக்கத்தில் வெளிவந்த தாமிரபரணி மற்றும் சாமி போன்ற படங்களும் ரசிகர்கள் மனதில் இன்றும் நிலைத்திருப்பவை. இவர் இயக்கத்தில் கடந்த வருடம் யானை திரைப்படம் வெளியானது.

இந்த படத்தில் அருண் விஜய் மற்றும் பிரியா பவானி சங்கர் முக்கிய வேடத்தில் நடித்திருந்த நிலையில் யானை திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் இயக்குனர் ஹரி டப்பிங் ஸ்டூடியோ ஒன்றினை தற்போது புதிதாக தொடங்கியுள்ளார். இதன் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றுள்ளது. இந்த திறப்பு விழாவில் இயக்குனர் ஹரியின் மனைவியும் நடிகையுமான ப்ரீத்தா, நடிகர் விஜயகுமார் மற்றும் அவருடைய மனைவி போன்றோர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் திறப்பு விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.