நாளுக்கு நாள் சுங்கத்துறை அதிகாரிகளால் பல லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றது. அந்த வகையில் ஹைதராபாத் விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்தை விவரங்களின் அடிப்படையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது துபாயிலிருந்து ஹைதராபாத் விமான நிலையத்திற்கு வந்த ஈகே 528 என்ற விமானத்திலிருந்து வந்த ஒரு பெட்டியை இடைமறித்து சோதனை மேற்கொண்டனர். அதில் செலோடேப் மூலம் மொபைல் கவரில் சுற்றப்பட்ட தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து மொத்தம் ரூபாய் 33.57 லட்சம் மதிப்புள்ள 583.11 கிராம் எடையுள்ள தங்கம் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சென்னை விமான நிலையத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2022 டிசம்பர் 31ஆம் தேதி வரை மொத்தம் ரூபாய் 124.863 கோடி மதிப்புடைய கடத்தல் பொருட்களை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இது சம்பந்தமாக 407 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 122 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.