
இன்றைய காலத்தில் ஆண்- பெண் இருபாலரும் சமூக வலைதள செயலிகளில் ஆர்வமாக உள்ளனர். அதிலும் மிக முக்கியமான சமூக செயலிகளில் ஒன்று இன்ஸ்டாகிராம்.
அண்மை காலங்களாக இன்ஸ்டாகிராமில் பலரும் தங்களது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். இதன் மூலம் பல்வேறு தொழில்களும் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் புதிய அப்டேட் ஒன்றை வழங்கி உள்ளது. அதாவது இன்ஸ்டாகிராமில் ஏற்கனவே புகைப்படங்களை 1:1, 4:5, 16:9 என்ற வடிவங்களில் மட்டுமே கிராப் செய்து பதிவேற்றம் செய்ய முடியும்.
ஆனால் தற்போது மெட்டா 3:4 என்ற ரேஷியோவிலும் புகைப்படங்களை பதிவேற்றும் செய்யும் வகையில் அப்டேட் செய்துள்ளது. இதனால் புகைப்படங்களை கிராப் செய்ய வேண்டிய அவசியம் இனி இருக்காது என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.