
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். இவர் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வர இருக்கிறது. இந்நிலையில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளிவந்த ஜெமினி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படம் வெளியாகி 22 வருடங்கள் ஆன நிலையில் நேற்று நடிகர் விக்ரம் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்.
அதில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து அன்பை பகிர்ந்த அனைவருக்கும் நன்றி. விருவிருப்பான அப்டேட் இன்னும் சில தினங்களில் வர இருக்கிறது. உங்களால் யூகிக்க முடிகிறதா.? ஓ போட மறந்து விடாதீர்கள் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் 22 வருடங்களுக்குப் பிறகு ஜெமினி படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக போகிறதா என தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் இந்த பதிவு தற்போது இணையதளத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மிக்க நன்றி.. for all the love pouring in today. Interesting updates .. இன்னும் சில தினங்களில்.
Any guesses??
& don’t forget to ஓ போடு!! ❤️ pic.twitter.com/3wtq8Yrfbv— Vikram (@chiyaan) April 12, 2024