தமிழ் சினிமாவில் மைனா என்ற திரைப்படத்தின் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை அமலா பால். இவர் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்கிறார். இவர் தமிழில் தலைவா, தெய்வத்திருமகள் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இயக்குனர் ஏ.எல் விஜய் யை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். இதனையடுத்து கடந்த வருடம் நவம்பர் மாதம் தன்னுடைய நீண்ட நாள் நண்பரான ஜெகத் தேசாய் என்பவரை நடிகை அமலாபால் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது நடிகை அமலாபால் கர்ப்பமாக இருக்கும் நிலையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஆடு ஜீவிதம் திரைப்படம் 100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்து சூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில் நடிகை அமலா பால் தன்னுடைய கணவருடன் ஜூஸ் குடிக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் என் சகோதரரை போல என் கணவரும் இருக்கிறார். முன்பு என் சகோதரர்கள் உணவை திருடி சாப்பிடுவார்கள். அதேபோன்று தற்போது என் கணவரும் அப்படி செய்கிறார். இப்படி உங்கள் உணவை திருடி சாப்பிடுபவர் யார் என பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

 

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)