தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் நடிகை குஷ்பூ. இவர் நடிப்பில் கடந்த 1991-ம் ஆண்டு சின்னத்தம்பி படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தப் படத்தை இயக்குனர் பி. வாசு இயக்கிய நிலையில் நடிகர் பிரபு ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படம் வெளியாகி 33 வருடங்கள் ஆகும் நிலையில் தற்போது நடிகை குஷ்பு தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் ‌ படத்தின் போஸ்டர் ஒன்றினை பகிர்ந்து அதில் காலம் வேகமாக கடந்து வருகிறது. சின்னதம்பி படம் வெளியாகி 33 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதை என்னால்  நம்பவே முடியவில்லை. அது எங்கள் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. படத்தின் மீது அனைவரும் காட்டிய அன்பு நம்பவே முடியாத ஒன்று. அனைவருக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவு தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.