தமிழ் சின்னத்திரையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் பாரதி கண்ணம்மா-2. இந்த தொடரில் பாரதி மற்றும் கண்ணம்மாவின் தோழியாக மது என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் You Tubeல் பிரபலமான ரேஷ்மா. இந்நிலையில் ரேஷ்மா தனக்கு நேர்ந்த அட்ஜஸ்ட்மென்ட் தொல்லை தொடர்பாக பேட்டி ஒன்றில் பேசி உள்ளார். அதாவது “சைடு கேரக்டருக்கு கூட அட்ஜஸ்ட்மென்ட் செய்யணும்.

அட்ஜெஸ்ட் பண்ண சொல்லி கேட்டதால் பல்வேறு வாய்ப்புகளை இழந்திருக்கிறேன். ப்ரொபைல் அனுப்பும்போதே அட்ஜஸ்ட்மென்ட்கு எஸ் ஆர் நோ என இரண்டு ஆப்ஷன் தருவாங்க. அப்போது NO என சொல்லியும் போன் போட்டு கேட்பாங்க என கூறி உள்ளார். ரேஷ்மாவின் இந்த பேட்டி தற்போது சமூகவலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.