ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ராஜமௌலி டைரக்டில் வெளியாகிய படம் “ஆர்ஆர்ஆர்”. இந்த படம் உலகம் முழுவதும் கடந்த வருடம் மார்ச் 25ம் தேதி வெளியாகியது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிய இந்த படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வசூல் சாதனையும் நிகழ்த்தியது.

அண்மையில் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் இறுதி பட்டியலில் ஆர்ஆர்ஆர் படத்தின் “நாட்டு நாட்டு” பாடல் பரிந்துரைக்கப்பட்டது. அதன்பின் 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்தது.இதில் சிறந்த பாடல் பிரிவில் ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருதானது வழங்கப்பட்டது.

இந்நிலையில் ஆஸ்கர் குறித்து ஏ.ஆர்.ரகுமான் தன் கருத்தை பகிர்ந்து உள்ளார். அதாவது, ஆஸ்கர் விருதுக்கு நாம் தவறான படங்களையே தேர்ந்தெடுத்து அனுப்புகிறோம். அதனால் தான் நமக்கு ஆஸ்கர் கிடைப்பதில்லை. மேற்கத்திய பார்வையிலிருந்து படங்களை தேர்ந்தெடுத்து ஆஸ்கருக்கு அனுப்ப வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.