
தற்போதைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் புகழைத் தேடி பல்வேறு தரப்பினரும் ரீல்ஸ் மோகத்தில் மூழ்கியுள்ளனர். பொது இடங்களில் சாகசம் என்ற பெயரில் சிலர் ரீல்ஸ் எடுக்க முயற்சித்து தங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்திக் கொள்வதோடு பிறருக்கும் ஆபத்தை விளைவிக்கும் விதமாக நடந்து கொள்கின்றனர்.
அவ்வகையில் பெங்களூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது இரண்டு சக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்டு ரில்ஸ் பதிவிட முயற்சித்துள்ளார். இதனை கவனித்த பொதுமக்கள் அந்த இளைஞரை சுற்றி வளைத்து அவருக்கு பாடம் புகட்டும் விதமாக அவரது இரண்டு சக்கர வாகனத்தை பாலத்தில் இருந்து கீழே தள்ளி விட்டு சேதப்படுத்தி உள்ளனர்.
A young man was seen performing reckless scooter stunts on Tumakuru National Highway for social media reels. Angry onlookers threw his scooter off a flyover as a stern warning.#BikeStunt #Bengaluru #Reels pic.twitter.com/4yyQX8aK3X
— The Munsif Daily (@munsifdigital) August 17, 2024
இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அங்குட்டு போறது..! இங்குட்டு போறது..! மற்றவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக சாகசத்தில் ஈடுபட முயற்சித்தது தான் பொதுமக்களின் கோபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
அதேபோன்று உத்தர பிரதேசத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் ரீல்ஸ் மோகத்தில் ஆறாவது மாடியில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.