
தமிழக இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியது தேசிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியது. மலேரியா, டெங்கு, கொரோனாவை போல் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு வடமாநிலத்தில் உள்ள இந்து அமைப்புகள், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்தனர். பிரதமர் மோடி கூட மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பாக விவாதித்தார் என்றெல்லாம் செய்திகள் வந்தன.
இதே போல் திமுக மக்களவை உறுப்பினர் ஆ,ராசாவும் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை ஒழித்தாக வேண்டும் என்று மென்மையாக தான் பேசினார். எனக்கு விந்தையாக இருக்கிறது. மலேரியா போல டெங்கு போல சனாதனத்தை ஒழிக்க வேண்டும். மலேரியாவையும் டெங்குவையும் அருவருப்பாக சமூகம் பார்க்கவில்லை.
அருவருப்பாக சமூகம் பார்க்கும் வகையில் தொழுநோய் இருந்தது, எச்ஐவி இருந்தது. அதேபோலத்தான் சமூக அவலம் நிறைந்த நோயாக சனாதனத்தை நாங்கள் பார்க்கிறோம் என்று பேசியிருந்தார். இது வட மாநில ஊடகங்களில் Breaking செய்தியாக வைரலாகி வருகிறது. அனைத்து ஊடகங்களும் பிரேக்கிங் செய்தியாக போட்டு வருகின்றனர். இதனிடையே பாஜக ஹிந்துத்துவ அமைப்பினர் #ArrestARaja , #Arrest_Udayanidhi என்ற ஹேஷ்டக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
It's not the time to pass by side of coward dog's bark, it's time to step them. Why Hindu dharma is often targeted bcoz we listen n forget😔.but this time let's 🔥
REPOST MAXIMUM IF YOU WANT TO SEE HIM IN JAIL. #ArrestARaja#Arrest_Udayanidhi pic.twitter.com/TpriuA6cT5
— 💪🎭..Rai ji..💪🎭 (@Vinod_r108) September 7, 2023