பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, மத்திய அரசு தமிழகத்தில் கல்வி திட்டம் சிறப்பான முறையில் இருக்கிறது என்று பாராட்டினாலும் கல்விக்கான நிதியை ஒதுக்கவில்லை. கல்விக்கான 60% நிதியை மத்திய அரசுதான் வழங்க வேண்டும். ஆனால் நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் மாநிலம் முழுவதும் 32,000 மேற்பட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் நிதி வழங்க முடியும் என்று மத்திய அரசு கூறுவதை ஏற்க முடியாது.

தமிழகத்தில் ஏற்கனவே கருணாநிதி மற்றும் அண்ணா ஆகியோர் சமச்சீர் கல்வியை கொண்டு வந்துவிட்டனர். தமிழகம் முழுவதும் அரசு பள்ளி வளாகத்திற்குள் தேவையில்லாமல் வெளி ஆட்கள் நுழைவதை தடுக்கும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தில் கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களுக்கு நீதி போதனை வகுப்புகள் நடத்தப்பட்டதால் ஒன்றரை லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர் என்று கூறினார்.