கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முன்னணி நிலவரங்கள் இன்று காலை முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. காலை முதலே காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வைத்து வருகிறது பெரும்பான்மைக்கு தேவையான 113 என்று எண்ணிக்கையை தாண்டி 120 இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வரும் நிலையில் டெல்லி மற்றும் பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியினர் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வரும் அதே நேரத்தில், சிம்லாவில் உள்ள பிரியங்கா காந்தி அங்குள்ள அனுமன் கோவிலில் வழிபாடு நடத்தி வருகிறார்.