
பாராளுமன்றத் தேர்தல் முடிவடைந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ஆன ராகுல் காந்தி எம்.பி இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் அமோகமாக வெற்றி பெற்றார். ஆனால் அரசியல் சட்டத்தின் படி, ஒரு தொகுதிக்கு மட்டுமே எம்.பி யாக செயல்பட முடியும். இதனால் ராகுல் காந்தி வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து ராகுல் காந்தி ரேபரேலி எம்.பியாக செயல்பட்டு வருகிறார். இவர் ராஜினாமா செய்ததால் அத்தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இடைத்தேர்தலில் ராகுல் காந்தியின் சகோதரியான பிரியங்கா காந்தி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வயநாடு நிலச்சரிவின் காரணமாக இத்தேர்தல் அறிவிப்புகள் வெளியிடாமல் அரசு இருந்து வந்துள்ளது. தற்போது வயநாடு தொகுதியில் நவம்பர் 13ஆம் தேதி தேர்தல் நடத்துவதாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலம் மற்றும் ஜார்கண்ட் சட்டசபை இடைத்தேர்தலின் தேதிகளை சேர்த்தே தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.