தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மொரப்பூரில் மணிமேலன் என்பவர் வசித்து வருகிறார். வருகிறார் கடந்த 22-ஆம் தேதி விடுமுறையில் மணிவேல் சொந்த ஊருக்கு சென்றார். சம்பவம் நடைபெற்ற அன்று மணிவேலனும், அவரது நண்பர் சேதுபதியும் மொரப்பூர் மேம்பாலத்தின் அடியில் நின்று கொண்டிருந்தனர். அங்கு வந்த கார் டிரைவரான சிங்காரம் என்பவருக்கும் நண்பர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
இதில் சிங்காரம் காயமடைந்தார். அவர் மொரப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மணி வேலனை கைது செய்தனர். தலைமறைவான சேதுபதியை தேடி வருகின்றனர். இந்நிலையில் சிறை கூடுதல் கண்காணிப்பாளர் வினோத் மணிவேலனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.