சென்னையில் திமுக கட்சியின் மூத்த முன்னோடிகள் ஆயிரம் பேருக்கு பொற்கிழி வழங்கும் விழா நடைபெற்றது. இதில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக வெற்றி பெற்றதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளது. அதில் முதல் முக்கிய காரணமே பிரதமர் மோடி தான். ஏனெனில் தமிழகத்தில் புயல் மற்றும் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டபோது வராத மோடி தேர்தல் சமயத்தில் மட்டும் 8 முறை வருகை புரிந்தார்.

அதன் பிறகு திமுக அரசின் சாதனைகள் மற்றும் திமுக முன்னோடிகளும் வெற்றிக்கு முக்கிய காரணம். பிரதமர் மோடியின் பருப்பு  கேரள மாநிலம் வய நாட்டில் கூட வேகலாம். ஆனால் நிச்சயம் தமிழ்நாட்டில் வேகாது. திமுகவின் மூத்த முன்னோடிகள் வழியில் நாங்கள் உழைத்து வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவோம். மேலும் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைப்போம் என்று கூறினார்.