இந்தியாவில் ஜனவரி 26, 2025 இல் நேற்றைய தினம் 76 ஆவது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி தலைநகர் டெல்லியில் மூவர்ண கொடியேற்றி குடியரசு தின விழாவை கொண்டாடினார். அப்போது குடியரசு தின விழா தோற்றமாக சிகப்பு மற்றும் மஞ்சள் நிற தலைப்பாகை அணிந்திருந்தார் மற்றும் வெள்ளை நிற குர்தா-பைஜாமா அணிந்து நீண்ட அடர்த்தியான நிறம் கொண்ட தலைப்பாகையுடன் தோற்றமளித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தின விழாவிற்கு பிரதமர் மிகவும் வண்ணமயமான, பளபளப்பான தலைப்பாகை அணிவது முக்கிய அம்சங்களாக உள்ளது. இதேபோன்று இந்த ஆண்டு குடியரசு தினத்தன்று “பந்தாரி சபா” என்ற குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பாரம்பரியமாக அணியப்படும் தலைப்பாகை அணிந்திருந்தார்.

இதற்கு முக்கிய காரணம் பிரதமர் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டின் பாரம்பரியமான கலைகளை வெளிப்படுத்தும் விதமாக குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினங்களில் வெவ்வேறு தலைப்பாகைகளும், உடைத்தோற்றத்திலும் வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.