திமுக சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், இது தொடர்ந்து கொண்டே போனால்…. நான் சொல்றேன் ஒன்றிய பாஜகவையும் சேர்த்து,  அதிமுகவையும் தமிழக மக்கள் எப்போதும் மன்னிக்கவே மாட்டார்கள். இன்னொரு சவால் விடுறேன்…  அதிமுக பொன்விழா மாநாடு நடத்துச்சு. மாநாடு என்றால் தீர்மானம் எல்லாம் போடுவோம். எல்லாரும் நல்லா பாப்பாங்க…  அதிமுக மாநாடு என்றால் ?

என்ன சாப்பாடு போடுவாங்கன்னு பார்ப்பாங்க.  புளிசாதமா ? பிரியாணியா ?  அதுதான் செய்தி சேனலே கவர் பண்ணிட்டு இருக்காங்க. நான் உங்ககிட்ட சவால் விடுகிறேன். ஒரே ஒரு தீர்மானம்…  அதிமுகவினுடைய மாநாட்டில் ஒரு தீர்மானம் போடுங்க. ஒன்றிய பாஜக தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வுக்கு ரத்து செய்யப்படும். அப்படின்னு ஒரே ஒரு தீர்மானம் மட்டும் போடுங்க. நான் இன்னும் தெளிவா சொல்லிடுறேன்..

எல்லாரும் சேர்ந்து தானே வாக்களித்தோம். ஒட்டுமொத்த மக்களும் வாக்குறுதி கொடுத்தோம். அதிமுகவும் சேர்ந்து தான் வாக்குறுதி கொடுத்தது. திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களே நான் உங்ககிட்ட கெஞ்சி கேட்டுக்குறேன். இதுல அரசியல் செய்ய வேண்டாம். நான் செய்யல. நீங்க கூட வர வேண்டாம். உங்களுடைய இளைஞரணி செயலாளரை அனுப்பி வைங்க.

உங்க இளைஞரணி செயலாளர் யாருன்னு எனக்கு தெரியல. இளைஞர் அணி செயலாளரை அனுப்பி வைங்க. இல்ல யாரோ ஒரு மாணவர் அணி செயலாளரை அனுப்பி வைங்க. நாங்களும் வருகிறோம். அனைத்து கட்சி பிரதிநிதியையும்  கூப்பிட்டுக்கலாம். எல்லாரும் சேர்ந்து நேரா டெல்லிக்கு போவோம்.  பிரதமர் வீட்டுக்கு முன்னாடி போய் உக்காந்துருவோம். அப்படி நீட் தேர்வு ரத்தாச்சுன்னா….  அந்த முழு பெருமையும் நீங்களே எடுத்துக்கோங்க. நான் சொல்லுறேன்..  அந்த முழு கிரெடிட்டு ADMK எடுத்துக்கட்டும். அதிமுகவினால் தான் நீட் தேர்வு ரத்தாச்சின்னு நான் ஒத்துக்குறேன்…  இதற்கு தயாரா ? உங்க அத்தனை பேரு முன்பாக நான் கேட்கிறேன். வெக்கம்,  மானம், சூடு, சொரணை உங்க கிட்ட எதிர்பார்க்கிறது கஷ்டம் தான் என தெரிவித்தார்.