தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்சி தொண்டர்களிடம் பேசும்  போது, எதற்காக இப்படி நடக்கிறோம் என்றால் ? உங்களுக்கு  ஒரு செய்தியை சொல்கின்றோம். நீங்க இன்னும் எங்களுக்கு ஓட்டு போட்டு ஆட்சி கொடுக்கவில்லை. கொடுக்கறதுக்கு முன்னாடியே பாரதிய ஜனதா கட்சி வருத்திக்கொண்டு, இந்த அளவிற்கு போகுதுன்னா… நீங்க  ஓட்டு மட்டும் போட்டா…  நாங்க சும்மா உக்காந்து இருப்போமா?  உங்களுக்காக போராடுவோம். உங்களை உயர்த்தியே தீர்வோம். ஏழையாக பிறந்தவன் ஏழையாக இருக்க வேண்டியவன் என்ற கணக்கை தவிடு பொடியாக.. அடித்து நொறுக்குவோம்.

படித்த இளைஞனுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பை தமிழகத்தில் உருவாக்கி கொடுப்போம். லஞ்சம் என்பது அறவே இல்லாமல் ஆக்குவோம். லஞ்சம் என்பது தமிழகத்தின் இலக்கணத்தில் இல்லாத அளவிற்கு பாரதிய ஜனதா கட்சியினுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் வேலை செய்வார்கள்.  நான் எத்தனையோ பேர படிச்சேன்… எத்தனையோ பேரை படிக்காமல் விட்டேன். அவர்களுக்கு தெரியாது. சாதாரண மனிதர்கள். ஒரு வாய்ப்புக்காக…  ஒரு ஏக்கத்தோடு நின்று கொண்டிருக்கிறார்கள். ஐந்து முறை எம்பி என்று யாரையும் சொல்லவில்லை .

பலமுறை எம்எல்ஏ என்று நான் யாரையும் சொல்லல. ஆனால் ஒரு வாய்ப்பு கிடைத்தால் ? ஐந்து முறை எம்பியை விட 15 மடங்கு நன்றாக செயல்பட கூடியவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து கொண்டிருக்கிறார்கள்.தேசப்பற்றோடு எப்போதும் கூட…  தன்னுடைய கொள்கையை விட்டுக் கொடுக்காதவர்கள் மேடையிலே.. மேடைக்கு கீழே நின்று கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் இளைஞர்கள் சாரைசாரையாக வருகிறார்கள். எனக்கே அது ஒரு விதத்தில் பயத்தை ஏற்படுத்தியது.

இளைஞர்கள் நம் மீது வைத்து இருக்கக்கூடிய நம்பிக்கையை பார்க்கும் போது பயம் வருகிறது. பயத்தின் மூலமாக நன்றாக செய்ய வேண்டும் என்கிற கடமை உணர்ச்சியும் அதிகமாகிறது. எத்தனை இளைஞர்கள் சாரை சாரையாக…  முதல் தலைமுறை சாமானிய மனிதர்கள்….  அரசியலில் இருந்து வெகு தூரம் இருந்தவர்கள்….  ஏதோ ஒரு தீப்பொறி அவர்களை தட்டி தூக்கி இருக்கிறது. என் மண்,  என் மக்கள் யாத்திரையில் நடந்து வரான்.

நேர்மையான ஒரு தமிழ்நாட்டை உருவாக்க முடியும் என்று நம்புறான்.  அதை பார்க்கும்போது தலைவர்கள் கிட்ட சொல்லுவேன். அந்த பயத்தோடு நமக்கு பொறுப்பும் வர ஆரம்பித்திருக்கிறத.  நமது பேச்சில் இன்னும் கொஞ்சம் கவனம் இருக்கணும். சொல்லுகின்ற செய்தி பொருத்தமாக இருக்கணும் என தெரிவித்தார்.