ஆந்திர மாநிலத்தில் ஆத்திரத்தில் மின் ஊழியர்  காவல் உதவி மையத்துக்கான மின் இணைப்பை துண்டித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் பார்வதிபுரத்தில் காவல்துறையினர் வாகன பரிசோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.  அப்போது அவவழியாக ஹெல்மெட் அணியாமல் வந்த  இளைஞர் ஒருவரை தடுத்து நிறுத்த முயல,லாவகமாக தப்பி  சென்றுவிட்டார்.  பின் அந்த இளைஞரை பின்தொடர்ந்து தடுத்து நிறுத்தி ஹெல்மெட் அணியாததால் ரூ 135 அபராதம் விதித்து புறப்பட்டு சென்று விட்டனர். இதை தொடர்ந்து அபராதம் பெற்ற  இளைஞர் மேலும் இருவருடன் வந்து போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளுடன் அபராதம் வித்தித்ததற்கு  வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

மின்துறை ஊழியரின் வாகனத்திற்கு அபராதம் விதித்தால் காவல் உதவி மையத்திற்கான மின் இணைப்பு துண்டிப்போம் என கூறி, மின்வாரிய ஊழியர் அருகில் இருந்த மின்கம்பத்தில் ஏறி உடனடியாக மின்சாரத்தை துண்டித்ததோடு, உங்களால் என்ன செய்ய முடியுமோ அதை நீங்கள் செய்யுங்கள் என்று தெரிவித்துவிட்டு அங்கிருந்து மின்துறை ஊழியரும் அவருடன் வந்தவர்களும் சென்று விட்டனர். இச்சம்வம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்த உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.