போஸ்ட் ஆபிஸ் பல திட்டங்களை கொண்டிருக்கிறது. வங்கிகளில் நிலையான வைப்புத்தொகை (அ) சேமிப்புக் கணக்குகளில் முதலீடு செய்வது ஒரு வழி எனில், அஞ்சல் அலுவலக சேமிப்பு வாயிலாக உங்கள் பணத்தை முதலீடு செய்வது மற்றொரு சிறந்த வழியாகும். போஸ்ட் ஆபீஸில் தொடர்வைப்பு கணக்கை எந்த வயது வந்தோரும் (அ) 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளும் துவங்கலாம். இந்தியா போஸ்ட் இணையதளத்தின் படி மாதாந்திர குறைந்தபட்ச டெபாசிட் தொகையாக 100 ரூபாயை கூட சேமிக்கலாம்.

ஜூலை 2022 ஆம் வருடம் முதல் அஞ்சலக தொடர் வைப்புத் திட்டத்திற்கு ஆண்டுக்கு 5.8% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இதற்குரிய கூட்டு வட்டி ஒவ்வொரு காலாண்டிலும் கணக்கிடப்படுகிறது. மத்திய அரசானது தன் சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை ஒவ்வொரு காலாண்டிலும் நிர்ணயம் செய்கிறது. போஸ்ட் ஆபிஸ் RD கணக்கு திறக்கப்பட்ட நாளில் இருந்து 5 வருடங்கள் (அ) 60 மாதங்களுக்கு பின் முதிர்ச்சியடைகிறது. டெபாசிட் செய்பவர் 3 ஆண்டுகளுக்கு பின் போஸ்ட் ஆபிஸில் RD கணக்கை மூடலாம்.

அத்துடன் கணக்கு தொடங்கிய நாளில் இருந்து ஒரு ஆண்டுக்கு பின் 50% வரை கடனாக பெறலாம். கணக்கு முதிர்ச்சியடைவதற்கு ஒரு நாளுக்கு முன் மூடப்பட்டால், போஸ்ட் ஆபிஸ் சேமிப்புக் கணக்கின் அடிப்படையில் வட்டிவிகிதங்கள் பயன்படுத்தப்படும். ஒரு போஸ்ட் ஆபிஸ் RD கணக்கை முதிர்வு தேதியில் இருந்து 5 வருடங்கள் வரை டெபாசிட் இன்றி வைத்திருக்க முடியும். இப்போதைய 5.8% வட்டி விகிதத்தில் மாதந்தோறும் ரூ.10,000 முதலீடு செய்தால், 10 வருடங்களில் அத்தொகையானது உங்களுக்கு ரூ.16 லட்சம் வருமானத்தை தரும்.

அதே நேரம் 10 ஆண்டிற்கான உங்களது மொத்த வைப்புத் தொகை 12 லட்சமாக இருக்கும். அதுமட்டுமின்றி மதிப்பிடப்பட்ட வருமானம் சுமார் ரூபாய்.4.26 லட்சமாக இருக்கும். ஆகவே நீங்கள் பெறக்கூடிய மொத்த வருமானமானது ரூ.16.26 லட்சம் ஆக இருக்கும். இதனிடையே கூட்டு வட்டியானது ஒவ்வொரு காலாண்டிலும் கணக்கிடப்படுகிறது. இது முதலீட்டாளர்களுக்கு அடிக்கடி வருவாயை ஈட்ட உதவும் என்பதால் இது மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.