வெளிநாட்டில் இருந்து இந்தியாவில் மருத்துவ மற்றும் உயர்கல்வி பயில வரும் மாணவர்கள் மத்திய அரசு இணையதள பக்கத்தில் தங்களின் தகவல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு தனித்துவ அடையாள எண் இதன் மூலம் வழங்கப்படும் எனவும் விசா உள்ளிட்ட நடைமுறைகளுக்கு அந்த எண் கட்டாயமாக்கப்படும் எனவும் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நடப்பாண்டு முதல் வெளிநாட்டை சேர்ந்த மாணவர்கள் இணைய பக்கத்தில் பதிவு செய்வது கட்டாயம். அவ்வாறு பதிவு செய்தவுடன் அவர்களுக்கு தனித்துவ அடையாள எண் வழங்கப்படும். அந்த எண்ணை கொண்டு தான் விசா பெற விண்ணப்பிக்க முடியும் என தெரிவித்துள்ளது.