தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருக்கும் மணிரத்தினம். இவர் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை தழுவி பொன்னியின் செல்வன் என்ற பெயரில் 2 பாகங்களாக படத்தை இயக்கினார். இதன் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் 500 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், சரத்குமார், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள்.

இந்த படத்தின் 2-ம் பாகம் ஏப்ரல் மாதம் 28-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதாவது பொன்னியின் செல்வன் 2 படத்தின் டிரைலர் வீடியோ மார்ச் 29-ஆம் தேதி வெளியாகும் என பட குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. அண்மையில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் முதல் பாடலான அகநக வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது டிரைலர் வீடியோ குறித்து அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இது தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.